விழாக்களில் தயாரிக்கப்படும் உணவு பெருமளவில் வீணாகும் நிலை தொடர்ந்து காணப்படும் நிலையில், “சிறு செயல் பெரிய மாற்றம்” என்ற கோஷத்துடன் கலையும் கல்வியும் அமைப்பின் சார்பில் Dr. சகா ஒரு முக்கியமான விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டார்.
சடங்கு நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவு ஏராளமான தேவையான மக்களுக்குச் செல்லாமல் வீணாகிறது என்பதை காட்டும் வகையில் அவர்,
“உணவை வீண் செய்யாதீர்கள்.
வீணாகப் போகும் என்று தெரிந்த பின்பும் உதவி செய்வதற்குப் பதிலாக, அது வீணாகாமல் பார்த்துக்கொள்வதே உண்மையான சமூகப் பணியாகும்”
என்று வலியுறுத்தினார்.
அதிகப்படியான உணவு தயாரிப்பு, சரியான பகிர்வு திட்டமின்மை, மற்றும் விழாக்களில் காணப்படும் அலட்சியம் போன்றவை உணவு வீணாவதற்கான காரணங்களாக இருப்பதாக அவர் கூறினார். இதைத் தவிர்க்க, நிகழ்ச்சிகளுக்கு முன் சரியான திட்டமிடல், மீதமான உணவை உடனடியாக தேவையானவர்களுக்கு கொண்டு சேர்க்கும் குழுக்கள் அமைத்தல் போன்ற நடைமுறைகளை சமூகமாக முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கலையும் கல்வியும் அமைப்பு தொடர்ந்து பொதுநலத்திற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளை செய்து வருவதை குறிப்பிடத்தக்கது. “சிறு செயலே பெரிய மாற்றத்தை உருவாக்கும்” என Dr. சகா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
பொது நலச் செயல் குறித்து விழிப்புணர்வு : “உணவை வீணாக்காதீர்” — Dr. சகா அழைப்பு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி கேக் வெட்டி விழா கொண்டாட்டம்!!
அடுத்த
தூத்துக்குடி மாமன்றத்தில் ஆறுமுகம் நியமன உறுப்பினராக பதவி ஏற்றார் – மேயர் ஜெகன் பெரியசாமி வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026