வீரசக்க தேவி ஆலய விழா மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு விழா ஆகிய இரு விழாக்கள் இன்று (09.05.2025) முதல் பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில் இரண்டு நாட்கள் அரசு விழாவாக நடைபெறுகிறது.
அதை முன்னிட்டு தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் தலைமையகம் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் திருச்செந்தூரில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி நோக்கி புண்ணிய தீர்த்தம் மற்றும் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதியை தொடர் ஓட்ட பேரணியாக எடுத்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டைக்கு கடந்த 39 ஆண்டுகளாக மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை சார்பில் கொண்டுள்ளது செல்லப்படுகிறது.

சிறப்பு அழைப்பாளராக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு ஜோதி தொடர் ஓட்ட பேரணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் திருச்செந்தூர் வீரபாண்டிய கட்டபொம்மன் மடம் டிரஸ்ட் தலைவர் முருகபூபதி, தொழிலதிபர் சந்திரன் ஆகியோர் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மதிமுக தெற்கு மாவட்ட துணை செயலாளர் வீரபாண்டி செல்லச் சாமி, தெற்கு மாவட்ட திமுக பிரதிநிதிகள் வெயில் ராஜ், மொட்டையசாமி (மேஸ்திரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் கைலாசபுரம் செண்பகராஜ், குமரரெட்டியாபுரம் அன்பில் பொய்யாமொழி, 45 வது வார்டு திமுக பிரதிநிதி கல்யாணி (எ) சிவசுப்பிரமணியன், கம்பளத்து நாயக்கர் சமுதாய நலச் சங்கம் தலைவர் முருகராஜா, தெற்கு மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் சரவணப் பெருமாள், வடக்கு மாவட்ட மதிமுக இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன், வழக்கறிஞர் செண்பக மல்ராஜ், மற்றும் ஊமைத்துரை தொண்டர் படை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் தலைமையகம் மாவீரன் ஊமைத்துரை தொண்டர் படை தலைவர் ராஜா, செயலாளர் மணி, பொருளாளர் ஸ்ரீதர், ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.