தூத்துக்குடி அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை, ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா, தேரோட்ட பவனி விழாவானது அன்று (01.05.2025) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நாளை (10.05.2025) சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் சித்திரை மாத தேரோட்ட பவனி தொடக்கம் நடைபெறுகிறது. (01.05.2025) வியாழக்கிழமை தொடங்கி (10.05.2025) சனிக்கிழமை வரை தினமும் மாலை 6 மணிமுதல் 7 மணிவரை மற்றும் இரவு 7 மணிமுதல் 9 மணிவரை திருக்கோயில் கலை அரங்கத்தில் வைத்து கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நாளை (10.05.2025) சனிக்கிழமை நடைபெற இருக்கும் தேரோட்ட பவனி விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பிக்குமாறு சிவன் கோவில் அறங்காவலர் குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அதைத்தொடர்ந்து தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கரராமேஸ்வரர் கோவில் சித்திரை தேரோட்ட விழாவினை முன்னிட்டு நேற்று நடைபெற்ற பச்சைச்சாத்தி நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கி சிறப்பு செய்தார்.