தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி, அவரது குடும்பத்தினர் பெரும் மனஅழுத்தத்தில் உள்ளனர்.
நாரைக்கிணறு கீழக்காலணி பகுதியைச் சேர்ந்த பொ. சந்தனமாரி, கணவர் கொடியன்குளம் மாரியப்பன் தலைமையிலான குழுவுடன் கடந்த மார்ச் 14, 2025 அன்று மாலி நாட்டிற்கு வேலைக்காக சென்றிருந்தார். அங்கு எட்டு மாதங்களாக பணிபுரிந்து வந்த அவருடன் கடைசியாக நவம்பர் 5, 2025 அன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அவரது மனைவி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நவம்பர் 7, 2025 அன்று மாலி நிர்வாகத்திலிருந்து வந்த தகவலின் மூலம், மாரியப்பன் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தினர் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில், அவரது மனைவி சந்தனமாரி, தனது இரு சிறுமிகளுடன் இணைந்து, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் அவர்களிடம் மனு அளித்தார்.
அவரது கணவரை விரைவில் மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மனுவில் கோரப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்த ஆட்சியர், சம்பவம் தொடர்பாக அரசுத் துறைகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
தூத்துக்குடி
மாலி நாட்டில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட தூத்துக்குடி தொழிலாளி — குடும்பம் கலங்கல்; ஆட்சியரிடம் மனு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மகனின் கொலைக்குத் தகுந்த நீதி கோரி — மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா!
அடுத்த
“எழுத்தறிவும், பொதுஅறிவும் தான் எதிர்காலத்தின் பூமிகை” — நூலக பணிகளை பார்வையிட்ட மேயர் தகவல்!!
இதையும் படிக்கலாம்
சமக – நாடார் பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கோலாகலம்: 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள்; மாவட்டத்தின் சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு!!
19 Jul 2026
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026