தூத்துக்குடி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி மாநகர துணை அமைப்பாளர் மகேஷ்வரன் சிங், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சென்னை அண்ணா அறிவாலயம் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதா ஜீவன் அமைச்சர் ஆசி பெற்று இந்த மனு அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஓட்டப்பிடாரம் தொகுதியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளதாக மகேஷ்வரன் சிங் தெரிவித்துள்ளார்.