கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த துயரத்தில் பங்கெடுத்து உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகம் முன்பு நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையேற்றார். மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன் சில்வா, செந்தூரப்பாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
அதேபோல், ஐஎன்டியூசி மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், விவசாய பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் மரிய ஆல்வின், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், ஊடகப் பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், ஊடகப் பிரிவு மாநில செயலாளர் முத்துமணி, மகளிர் காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவி முத்துவிஜயா, அமைப்புசாரா மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ.டி. பிரபாகரன், மார்க்கஸ், அருணாச்சலம், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர், செயலாளர்கள் கோபால், அந்தோணி ஜெயராஜ், வார்டு தலைவர்கள் முத்துராஜ், சரஸ்வதி நாதன், மகேந்திரன், கருப்பசாமி, சீனிவாசன், மாரியப்பன், வெள்ளையன், அங்குசாமி, பெனடிக், சிமியோன், ராஜரத்தினம், ஜேம்ஸ், அந்தோணிசாமி, ஜான்சன், ஜெயபிரகாஷ், இசக்கி ராஜா, முருகசங்கர் மற்றும் பலரும் பங்கேற்று உயிரிழந்தோரின் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தினர்.
உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நிகழ்வில், "மனித உயிர் எந்த அரசியல் பாகுபாட்டையும் கடந்து நிற்கிறது" எனக் கூறிய காங்கிரஸ் நிர்வாகிகள், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தூத்துக்குடி
கரூர் துயரத்தில் பங்கெடுத்த தூத்துக்குடி காங்கிரஸ் – மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கரூர் விபத்து: “இந்தியாவின் இரண்டாம் ஜாலியன் வாலாபாக் படுகொலை” – உருக்கமான கடிதம் எழுதிய பி.பாபு!!
அடுத்த
“தூத்துக்குடியில் ஆன்மீக பெருமைக்கு சிறப்பு மரியாதை: PMT இசக்கிராஜா தேவரை சந்தித்தது சமத்துவ மக்கள் கழகம்”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி சிறப்பு மக்கள் நீதிமன்றம்: 153 வழக்குகள் விசாரணை – 20 வழக்குகளுக்கு தீர்வு; ரூ.75.25 லட்சம் தீர்வுத்தொகை!!
19 Jul 2026
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026