பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள அருள்மிகு வீர சக்கதேவி ஆலயத்தில் பெளர்ணமியை முன்னிட்டு 02.03.2026 அன்று இரவு 8.00 மணி முதல் 12.00 மணி வரை சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடைபெற்றன.


இதையொட்டி அம்மனுக்கு 11 வகையான அபிஷேகங்கள், சிறப்பு அலங்காரம், மாலை பூஜை, அகல் விளக்குப் பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வீர சக்கதேவியின் திருவருளைப் பெற்றனர்.


அன்னதானத்திற்கு R.வீரமல்லு – ஆனந்தவள்ளி குடும்பத்தினர், V.ராஜேஷ் – R.சக்கதேவி, V.கமல் – K.சுந்தரி, V.பிரபு – P.லாவண்யா, V.சக்திவேல் – S.பாலாம்பிகா (கட்டபொம்மன் நகர்) ஆகியோர் உபயதாரர்களாக இருந்தனர். அகல் விளக்குப் பூஜைக்கு V.கந்தன் – K.தமிழரசி (குமரெட்டியாபுரம்) உபயமளித்தனர். மாலை அலங்காரப் பூஜைக்கு M.ராஜா நாயக்கர் (TPT), R.உமையராணி குடும்பத்தினர் (R.DME, B.A., LL.B.), திருமதி K.வித்யா (R.R.Salt, முத்தையாபுரம்) ஆகியோர் உபயதாரர்களாக இருந்தனர்.


11 வகையான அபிஷேகங்களுக்கு அர்ஜுனன் ராமன் – கங்காதேவி குடும்பத்தினர் (கோரம்பள்ளம்) உபயமளித்தனர். பரிசுகளை M.ஆனந்த், K.சுப்புலட்சுமி (சாயர்புரம்) வழங்கினர்.


இந்நிகழ்ச்சியை ஆலயக் குழுத் தலைவர் S.வேலுச்சாமி, பொருளாளர் P.வரதராஜப் பெருமாள் (செல்: 9994169917), செயலாளர் M.ஆதிசங்கர் (செல்: 9894294330) விழாக்குழு தலைவர் வலசை கண்ணன் ஆகியோர் தலைமையில் குழுவினர் சிறப்பாக ஒருங்கிணைத்தனர். பெளர்ணமி சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆன்மிக மகிழ்ச்சியுடன் திரும்பினர்.