இன்று பொதுத்தேர்வை எழுதத் தயாராக இருக்கும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும், வரவிருக்கும் 11 ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதத் தயாராக இருக்கும் மாணவர்களுக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள்.


பயம், பதற்றம் ஆகியவற்றை விலக்கி வைத்து தன்னம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள். உங்கள் உழைப்பும் முயற்சியும் நிச்சயம் சிறந்த வெற்றியைத் தரும்.


உங்கள் கனவுகளை நனவாக்கவும், உயர்ந்த இலக்குகளை அடையவும் எங்கள் தலைவர் தலைமையிலான திராவிட மாடல் அரசு எப்போதும் உங்களுடன் நிற்கிறது. கல்வியே உங்கள் எதிர்காலத்தின் அடித்தளம் என்பதை நினைவில் கொண்டு உறுதியுடன் முன்னேறுங்கள்.


வெற்றி உங்கள் வசம்!


வாழ்த்துக்களுடன்,


பி. கீதா ஜீவன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர்.