முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மு நேரடி வாரிசுதாரரான வீமராஜா என்ற ஜெகவீரபாண்டிய கட்டபொம்முத்துரை சற்று முன் இயற்கை எய்தினார். இவரது மறைவு பகுதி மக்களிடம் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வரலாற்றுப் பாரம்பரியத்தை பேணிக்காத்து வந்த இவர், ஆண்டு தோறும் நடைபெறும் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மு பிறந்தநாள், நினைவு நாள் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். அவரது மறைவிற்கு பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு வீரசக்கதேவி ஆலய குழு சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தும், அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தும் ஆலயக் குழு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இறுதிச்சடங்கு தொடர்பான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.