தூத்துக்குடி 50 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட பாரதி நகர், குருவி மேடு பகுதிகளில் நீண்ட நாட்களாக தார் சாலை சீரமைக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் தற்போது புதிய தார் சாலைகள் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோருக்கு 50 வது வார்டு பகுதி பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மேயர் ஜெகன் பெரியசாமி, தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற  மாதாந்திர மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர் சரவணகுமார் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.


மேலும் 50 வது வார்டு பகுதி முழுவதும் பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பு, மற்றும் தோண்டப்படும் மணல்களை உடனடியாக அகற்றி பொதுமக்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.