தூத்துக்குடி சிப்காட் பகுதியில் கூடிய விரைவில் திறக்க இருக்கும் வின்பாஸ்ட் கார் தொழிசாலையில் உள்ள வேலை வாய்ப்பில் தூத்துக்குடி இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்க மாநகராட்சியை வலியுறுத்துவதாக இன்று காலை மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலையில் நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் மாநகராட்சி அதிமுக கொறடாவும், 51 வது வார்டு கவுன்சிலரும், வழக்கறிஞருமான மந்திர மூர்த்தி வலியுறுத்துவதாக தூத்துக்குடி அதிமுக சார்பில் கேட்டு கொள்கிறேன்.

மேலும் தெருநாய்கள் தொந்தரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாது நம் தூத்துக்குடி பகுதி உப்பள தொழிலாளிகள் நிறைந்த பகுதி, தற்போது உப்பு உற்பத்தி பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து தற்போது உப்பு இறக்குமதி செய்யும் சூழல் உள்ளது.
உப்பு தொழிலாளிகளின் வாழ்வாதாரம் மற்றும் அவர்களது நலனை கருத்தில் கொண்டு நலவாரியம் மூலம் அவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி மாநகரத்தில் பின்தங்கிய பகுதி பொது கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்று தூத்துக்குடி அதிமுக சார்பில் கேட்டு கொள்கிறேன் என்று பேசினார்.