தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சமூகப் பொறுப்பு நிதியில் இருந்து புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்களை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்.



தூத்துக்குடி திரேஸ்புரம் மேட்டுப்பட்டி உப்பு சங்கம் பின்புறம் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், அம்பேத்கர் நகர் மெயின் ரோடு, ஸ்டெம் பூங்கா அருகில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையங்களை மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் முன்னிலையில் திறந்து வைத்தார்.



பின்னர் ராஜகோபால் நகர் மாதா மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை  வழங்கும் முகாமை பார்வையிட்டு, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு அட்டை பெற விண்ணப்பம் செய்த பயனாளிகளின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு உடனே காப்பீடு அட்டைகளை பயனாளிகளுக்கு அமைச்சர் வழங்கினார்.


நிகழ்ச்சியில் ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் பிரபு, தாசில்தார் முரளி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், 4 வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகேஸ்வரி பாஸ்கர், திமுக தொண்டரணி இணை அமைப்பாளர் அன்பரசன், 4 வது வார்டு வட்ட செயலாளர் சதீஷ் குமார், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அபிராமி நாதன், மற்றும் திமுக செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டனர்.