புத்தொழில் களம் இறுதி சுற்றில் வெற்றிபெற்ற 3 இளம் தொழில் முனைவோருக்கான 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முதல் கட்டமாக ரூபாய் 2 லட்சம் ரூபாயினை வெற்றி பெற்றவர்களுக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று காலை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து வெற்றி பெற்றவர்களிடம் ரூபாய் 2 லட்சம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் சென்ற மாதம் தூத்துக்குடியில் நடந்த புத்தொழில் களம் நிகழ்ச்சியின் வழியாக பல இளைஞர்கள் இளம் பெண்கள் தொழில் முனைவோர்களாக தொழில் தொடங்குவதற்கான முன்னெடுப்பை செய்து இருந்தோம்.
அதன் வழியாக மூன்று பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார்கள். ஒவ்வெருவருக்கும் தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று முதல் கட்டமாக ரூபாய் 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. விரைவில் அடுத்த இரண்டு கட்டங்களாக மீதம் பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும்.
இந்த தொழில் முனைவோர்கள் புத்தொழில் களம் நிகழ்ச்சியின் போது ஏறத்தாழ 400 பேர் விண்ணப்பம் செய்து இருந்தார்கள். அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை மறுபடியும் இன்று அழைத்து இருக்கிறோம். அன்று அவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பை இழந்து இருந்தாலும், அரசு கொண்டு வந்திருக்கின்ற திட்டங்கள் வழியாக அல்லது வங்கிகளில் இருக்கக்கூடிய திட்டங்கள் வழியாக உதவி பெறுவது உதவி செய்வது என்பதற்காக இன்று அவர்களை அழைத்து இருக்கிறோம்.
இதன் மூலம் மீண்டும் அவர்களுக்கு உதவி செய்வதற்கு அரசு மற்றும் வங்கியில் இருக்கக்கூடிய திட்டங்களை எடுத்துரைப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 40க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பெண்களை இன்று அழைத்திருக்கிறோம். சிலருடைய உதவியோடும் சிஎஸ்ஆர் ஃபண்டு மூலமும் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி இருக்கிறோம்.
பஹல்காம் தாக்குதல் பற்றி செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு நிச்சயமாக அதைப் பற்றி பேச வேண்டுமென்றால் எல்லோரையும் பாதிப்பு அளித்திருக்கக்கூடிய, அதிர்ச்சி அளித்திருக்கக்கூடிய மிகப்பெரிய சோகமான நிகழ்வு அது, ஆனால் அதை அரசியலாக்க கூடிய சூழ்நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம் ஒன்றிய அரசாங்கம் இதை வேறு திசைக்கு திருப்ப பார்ப்பதும் இந்த தாக்குதல் அபாயத்தை சூழ்நிலைக்கு ஏற்ப வேறு திசைக்கு தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.
சில தவறுகள் ஒன்றிய அரசாங்கத்திடம் இருக்கிறது. அதை அவர்கள் ஏற்றுக்கொண்டு சரி செய்ய வேண்டும். அதை சரி செய்யாமல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தாக்குதல் நடைபெறும் போது அதை அரசியல் ஆக்கி ஆதாயம் அவர்களுக்கு ஏற்றவாறு சூழ்நிலைகளை உருவாக்குவது. எல்லாமே நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பங்கமாக வந்துவிடும் என்பதை யாராக இருந்தாலும் புரிந்து கொள்ள வேண்டும். என்று செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தூத்துக்குடி
பஹல்காம் தாக்குதலை அரசியல் ஆக்கி ஆதாயம் தேடுவது நாட்டின் பாதுகாப்பிற்கு மிகப்பெரிய பங்கமாக அமைந்துவிடும் - எம்.பி. கனிமொழி பரபரப்பு பேட்டி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
புத்தொழில் களம் வெற்றியாளர்களுக்கு முதற்கட்ட நிதி - மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி வழங்கினார்!!
அடுத்த
தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களை அமைச்சர் கீதா ஜீவன் திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது எதிரொலி: தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல் – முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட 250 பேர் கைது!!
20 Jul 2026
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது – விளாத்திகுளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
20 Jul 2026