தூத்துக்குடியில் இரண்டு வாரத்திற்கு முன்பு ஏப்ரல் 5ம் தேதி தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் வைத்து எம்.பி.கனிமொழி கருணாநிதி தலைமையில் புத்தொழில் களம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திறமை மற்றும் புதிய எண்ணங்கள் கொண்ட இளைஞர்கள் சாதிக்க விரும்பினாலும் அவர்களுக்கு அங்கீகாரம் நிதியுதவி பெறுவது சவாலாக உள்ளது. இதை மாற்ற தூத்துக்குடி இளைஞர்களுக்காக எம்.பி. கனிமொழி கருணாநிதி புத்தொழில் களம் என்ற முயற்ச்சியை தொடங்கி வைத்தார்.

இந்த புத்தொழில் களம் இறுதி சுற்று தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் எம்.பி. தலைமையில், அமைச்சர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் தொழிலதிபர்கள் தொழில் முனைவோர்கள் மற்றும் மேயர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் 400 இளம் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். இந்த முயற்ச்சியின் மூலம் வெற்றிபெற்ற 3 இளம் தொழில் முனைவோருக்கான 10 லட்சம் நிதியுதவி வழங்குவதற்கான முதற்கட்ட நிதி உதவியை மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி இன்று (29.04.2025) காலை மக்களவை உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து வெற்றியாளர்களுக்கு வழங்கினார். பின்னர் வெற்றிப்பெற்ற இளம் தொழில் முனைவோர்களிடம் கலந்துரையாடினார்.
