தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆணையின்படி, கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலின்படி, கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாக்க, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.

திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கலந்து கொண்டு இன்று (27.04.2025) 21 வது வார்டு கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, அமெரிக்கன் ஆஸ்பத்திரி ரவுண்டானா அருகிலும், 4வது வார்டு கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, அம்பேத்கர் நகர் மெயின் ரோட்டிலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி 10 வது வார்டு பூப்பாண்டியாபுரம் கழக தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, சோட்டையன் தோப்பு மெயின் ரோட்டிலும் ( தொழுநோய் மருத்துவமனை அருகில் ), ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி 12 வது வார்டு மாதா நகர் கழகத் தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, மாதா நகர் மெயின் ரோட்டிலும், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தாளமுத்து நகர் கழக தோழர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட, தாளமுத்து நகர் மெயின் ரோடு உட்பட 5 இடங்களில் இரண்டாம் கட்டமாக, நீர், மோர், ரோஸ்மில்க் மற்றும் தண்ணீர் பழங்கள் அடங்கிய பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு குளிர்பானங்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் திரளான தவெக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
