தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை  வசதிகள் இன்றி தவிக்கும் மாணவ மாணவிகளுக்கு உடனடியாக அடிப்படை வசதிகள் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி தர கோரி மாவட்ட நிர்வாகத்தை இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் பகுதியில் செயல்படும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கழிப்பிடம் வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர்.

மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசைனிங் கோட்ஸ் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு ஏற்ப கணினி வசதிகள் இல்லை, உடனே பழுதடைந்த கணினிகளை சரி செய்து படிப்பதற்காக மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கம் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பாக  வலியுறுத்துவதாக இந்திய மாணவர் சங்கம் மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் தெரிவித்துள்ளார்.