தூத்துக்குடி 48வது வார்டில் அதிமுக, பாஜக கட்சிகள் தமிழ்நாடு மக்களுக்கு செய்த துரோகங்கள் குறித்து செயல்படுத்திய திட்டங்களை எடுத்து கூறும் விதமாக பொதுமக்களிடம் தெரிவிக்கும் வகையில் திமுக நிர்வாகிகள் சார்பில் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.
திமுக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆலோசனைப்படி, தூத்துக்குடியில் வார்டு வாரியாக பொதுமக்களுக்கு அதிமுக, பாஜக செய்த துரோகங்கள் குறித்து செயல்படுத்திய திட்டங்களை எடுத்துக்காட்டும் விதமாக நோட்டீஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து NEET தேர்வு, மூன்று வேளாண் சட்டத்திற்கு ஆதரவு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு, மின் கட்டண உயர்வுக்கு காரணமான உதய் மின் திட்டத்திற்கு ஆதரவு, இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு, போன்ற பல்வேறு துரோகங்களுக்கு துணை போன அதிமுக எடப்பாடி. பழனிச்சாமி ஒன்றிய பாஜக அரசுடன் சேர்ந்து அதிமுக செய்த துரோகத்தை மக்களுக்கு வெளிப்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகரம் 48 வார்டு வள்ளிநாயகபுரம் பகுதியில் பிரையன்ட் நகர் பகுதி செயலாளரும், கவுன்சிலருமான ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர் நவநீதன் தலைமையில், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் நிர்மல் சரவணகுமார், தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் சி.என். அண்ணாதுரை, கவுன்சிலர் ராஜேந்திரன், பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர் பிரதீப் ஆகியோர் முன்னிலையில் நேற்று (23.04.25) மாலை அதிமுக, பாஜக மக்களுக்கு செய்த துரோகத்தை வெளிப்படுத்தும் வகையில் வள்ளிநாயகபுரம் பகுதி பொதுமக்களுக்கும், வியாபாரிகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் 48 வது வட்ட பிரதிநிதி ஜேசுபாலன், 49 வது வட்ட செயலாளர் மூக்கையா, கவுன்சிலர் சரவணகுமார், மாநகர மாணவரணி துணை அமைப்பாளர் வே. பால, ஐடி விங் பகுதி ஒருங்கிணைப்பாளர் சந்தன முனீஸ்வரன், ஐடி விங் பகுதி அமைப்பாளர் குமார், பகுதி பொறியாளர் அணி லிங்கராஜா, நெசவாளர் அணி வெள்ளை பெருமாள், 48வது வட்ட துணை செயலாளர் அனிதா ஜெயராமன், ந. ரமேஷ், வட்ட நிர்வாகிகள் ரமேஷ், லோகநாதன், முருகானந்தம், இலக்கிய அணி மாடசாமி, பகுதி நெசவாளர் அணி அமைப்பாளர் இசக்கித்துரை, பகுதி விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் மரியராஜ் உள்ளிட்ட 48வது வார்டு திமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அதிமுக, பாஜக மக்களுக்கு செய்த துரோகங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்த 48 வது வார்டு திமுக நிர்வாகிகள்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செபத்தையாபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அசன பண்டிகை விழா!!
அடுத்த
தூத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்து தர SFI மாவட்ட செயலாளர் கிஷோர்குமார் வலியுறுத்தல்!!
இதையும் படிக்கலாம்
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது எதிரொலி: தூத்துக்குடியில் திமுகவினர் சாலை மறியல் – முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கருணாநிதி எம்.எல்.ஏ., துணை மேயர் ஜெனிட்டா உள்ளிட்ட 250 பேர் கைது!!
20 Jul 2026
முதல்வர் விஜய் குறித்து சர்ச்சை பேச்சு: விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது – விளாத்திகுளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு!!
20 Jul 2026