தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் 119 வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா நடந்தது.

விழாவை முன்னிட்டு 20ம் தேதி மற்றும் 21ம் தேதிகளில் கன்வென்ஷன் கூட்டங்கள் நடந்தது. 22ம் தேதி காலை  சிறப்பு உபவாச ஜெபம், மாலை பண்டிகை ஆயத்த ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.

23ம் தேதி காலை பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. இந்த ஆராதனையில் குப்பாபுரம் சேகர தலைவர் செல்வின்ராஜ் சார்லஸ் செய்தி அளித்தார். அன்று மாலை பொது மக்களுக்கு அசன விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.  இந்நிகழ்ச்சியை செபத்தையாபுரம் சேகர குரு இம்மானுவேல் ஜெபம் செய்து ஆரம்பித்து வைத்தார்.

விழாவிற்கு சிறப்பு விருந்தினராக SDK. ராஜன், ஜெபச்சந்திரன், S.D. அருண் ஜெபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர், ஆலய பொருளாளர் பிரகாஷ் ராஜ்குமார், முன்னாள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பொன்சிங் ராஜ்,  மற்றும் சபை ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ், சாந்தசீலன், சாந்தசிங், எமில் டேவிட், SSK. சோபன் பாலசிங், ஆபிரகாம், அரவிந்தராஜ், அருண் தேவதுரை, ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள், சபை மக்கள், செபத்தையாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் அசன பண்டிகை விழா நடந்தது.