திமுக அரசு, மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி பொதுமக்களின் அடிப்படை வசதியான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, உட்பட எந்தவித வசதிகளையும் ஏற்படுத்தித் தராமல், தூத்துக்குடி மாநகராட்சி 60 வது வார்டு லேபர் காலனி பகுதியை புறக்கணித்து வந்தனர். இந்த வார்டில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.


நேற்று (21.04.2025) திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறை களையும் கூட்டத்தில், கழிப்பறை வசதி, மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித் தர கோரி தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றி கழகத்தின் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், 60 வது வார்டு கழகத் தோழர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்களோடு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்திடம் மனு அளித்து அடிப்படை வசதிகளை எந்த வித தாமதமும் இன்றி உடனே நிறைவேற்றி தர வலியுறுத்தப்பட்டது.



அடிப்படை வசதிகளை செய்து தர கோரி வலியுறுத்தியதின் பேரில் மாவட்ட நிர்வாகத்தால் இன்று (23.04.2025) 60 வது வார்டு லேபர் காலனி பகுதியில் முதற்கட்டமாக பொதுமக்களின் அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் சார்பில்  பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப கூடிய விரைவில் பயன்பாட்டிற்கு வர தற்போது வேலைகள் நடைபெற்று வருகிறது.


தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி படிக்கட்டுகளில் மற்றொரு வெற்றி படிக்கட்டுகள். மனு அளித்த மறுநாளே பொதுமக்கள் மற்றும் தவெக கட்சியின் சார்பில் அளித்த மனுமீதான கோரிக்கையை ஏற்று விரைந்து நடவடிக்கை எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கு 60 வது வார்டு பகுதி பொதுமக்கள் மற்றும் தவெக கட்சி சார்பில் நன்றியை தெரிவித்தனர்.