திமுக அமைச்சர் பொன்முடி பெண்களை கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசியதை கண்டித்தும் அவர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்க தவறியதை கண்டித்து தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் இன்று மாலை தூத்துக்குடி டூவிபுரம் பெல் ஸ்கூல் அருகில் முன்னாள் அமைச்சர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பேசும் போது தமிழகத்தில் நடைபெறுகின்ற ஆட்சி காட்டுமிராண்டி தனமான ஆட்சி, இந்த காட்டுமிராண்டித்தனமான ஆட்சியை அகற்றுவதற்காக தான் புரட்சித் தமிழர் எடப்பாடி யார் அருமையான கூட்டணியை அமைத்து, திமுகவிற்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக கூட்டணி அமைத்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் என்ன பேசுவது என்று தெரியாமலே பேசிக் கொண்டிருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் இருப்பதினால் தான் ஸ்டாலின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கக்கூடிய பொன்முடி பெண்களைப் பற்றியும் இந்து மதத்தை பற்றியும் மிகவும் கேவலமாக பேசி இன்றைக்கு தமிழ்நாடு மக்களின் ஒட்டுமொத்த வயித்தெரிச்சலையும், எதிர்ப்பையும் பெற்று இருக்கிறது. இந்த திமுக அரசையும், பொன்முடி பேச்சை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் பொன்முடியை உடனே அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். அவர் அமைச்சர் பதவிக்கே தகுதியற்றவர் என்று தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்து வருகின்றனர்.
அதைத்தொடர்ந்து தான் அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்டம் சார்பில் அமைச்சர் பொன்முடியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இந்து சைவ வைணவ மதத்தை கொச்சை படுத்தியும், தமிழ்நாடு ஒட்டுமொத்த பெண்களையும் இழிவு படுத்தி பேசி வருகிறார்கள்.
இந்துக்களை திருடர் என்று கூறியவர் தான் இந்த கலைஞர், இலங்கை பாலத்தை கட்டியது ராமர் என்று சொல்லும்போது ராமர் என்ன இன்ஜினியரிங் படித்தவரா, இப்படி பேசியவர் தான் இந்த கலைஞர் கருணாநிதி இப்படித்தான் திமுக தொடர்ந்து இந்துக்களையும், பெண்களையும் கேவலமாக பேசி வருகிறது. அமைச்சரின் பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் எந்த ஒரு கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை, தமிழர் வருடப்பிறப்பு என்பது சித்திரை முதல் தேதி அதாவது ஏப்ரல் மாதம் 14ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தமிழர் வருடப்பிறப்பு அன்று இந்துக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லவில்லை, தமிழக மக்களை வஞ்சித்துக் கொண்டு ஆட்சி செய்பவர்தான் முதல்வர் ஸ்டாலின், இந்த ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என்கிறார்.
முதல்வர் ஸ்டாலின் ஒரு தெலுங்கர், தமிழ்நாட்டு மக்கள் திராவிடர்கள் அல்ல, தமிழக மக்கள் தமிழர்கள் தான் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாகத்தான் திமுக அமைச்சரவையில் இருக்கின்ற அமைச்சர்கள் பேசி வருகிறார்கள்.
இதை கண்டித்து தூத்துக்குடியில் நடைபெறுகின்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் காரணமாக பொன்முடி உடனே பதவி விலக வேண்டும். இல்லையென்றால் முதல்வதாக இருக்கின்ற ஸ்டாலின் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் பொன்முடி பேசியதை நான் ஆதரிக்கிறேன் என்று முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் சொல்ல வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் அவர்களே தாங்கள் பொன்முடி பேசியதே ஆதரிக்கிறீர்களா, ஆதரித்தால் பொன்முடியை அமைச்சர் பதவியில் வைத்துக் கொள்ளுங்கள், இல்லையென்றால் உடனே அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
இதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த கருத்தாகும். இதை கண்டித்து தான் தமிழக முழுவதும் அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திதை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதன் பிறகாவது பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால் எடப்பாடி ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களில் நடத்த இருக்கிறோம். என்று பேசினார்.
முதல்வரை தெலுங்கர், என்றும், அவன், இவன், என்றும் ஒருமையில் முன்னாள் அமைச்சர் பேசியது அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
