50 ஆண்டுக் காலமாக தமிழக மக்களை வஞ்சித்து வரும், திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு முடிவுரை எழுதி, தமிழகத்தில் மாபெரும் மாற்று சக்தியாக, 2026ல் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை எதிர்நோக்கி, வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதியார் தலைமையை ஏற்று,

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளிலிருந்து, திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக ஆகிய மாற்றுக் கட்சிகளில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி,
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் வழிகாட்டுதலோடு, தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில், தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் ககொண்டனர்.
அமைச்சர் கீதாஜீவன் மற்றும் மேயர் ஜெகன் பெரியசாமி வார்டுகளை சேர்ந்த திமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
