தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் காவல்துறையினரின் பாதுகாப்பு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் சி. மதன் இ.கா.ப நேரில் சென்று ஆய்வு செய்தார்.


மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தி வருகின்றனர்.


அதன்படி, தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினரின் பணிகளை அவர் நேரில் ஆய்வு செய்தார். அப்போது வளாகத்திற்குள் வரும் சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனை செய்து, குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார்.


மேலும், நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் காவல்துறையினரிடம் வலியுறுத்தினார்.