தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஒட்டப்பிடாரம் ஊராட்சியில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டன. தெற்கு பரும்பூரில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி, வ.உ.சி தெருவில் ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி, சிவன் கோவில் தெருவில் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.85 லட்சம் மதிப்பிலான பணிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவஹர், ஊராட்சி செயலர் இராமலிங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ், பரும்பூர் ராஜாமணி, முருகன், தெற்கு ஆவரங்காடு கிருஷ்ணசாமி, கிளைச் செயலாளர் இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பணிகள் விரைவாக நிறைவு பெற்று பொதுமக்களுக்கு பயன்பாட்டுக்கு வரும் வகையில் அதிகாரிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அறிவுறுத்தினார்.