தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியை ஆண்ட இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல்வீரர் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நேரடி வாரிசு வீமராஜா (என்கிற ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை) மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், விடுதலைக் களம் கட்சி நிறுவனத் தலைவர் கொ. நாகராஜன், நேற்று பாஞ்சாலங்குறிச்சிக்கு நேரில் சென்று வீமராஜாவின் உடலுக்கு மலர் தூவி இறுதி அஞ்சலி செலுத்தினார். அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் தூத்துக்குடி துறைமுகத்தில் பணியாற்றிய வீரபாண்டிய கட்டபொம்மன் உள்ளிட்டோர் உடன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.