தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான அமைச்சர் கீதா ஜீவன் குறித்து பொதுமக்கள் பாராட்டி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள், “அமைச்சர் கீதா ஜீவன் மக்கள் மனங்களை வென்ற அமைச்சர். அவர் எப்போதும் நகரம் முழுவதும் சுற்றி பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பவர். பொதுமக்கள் அவரை எளிதாக சந்திக்க முடிவது அவரின் சிறப்பாகும்” என்று கூறுகின்றனர்.
மேலும் கடந்த மழைக்காலத்தில் தூத்துக்குடி நகரில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சில இடங்களில் தேங்கிய மழைநீர் கூட மிக விரைவாக வெளியேற்றப்பட்டதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் கழிவுநீர் கால்வாய் அமைத்தல், சாலை வசதி மேம்படுத்தல், குடிநீர் வசதி உள்ளிட்ட பல அடிப்படை வசதிகளை செய்து மக்களுக்கு பயன் அளித்து வருபவர் அமைச்சர் கீதா ஜீவன் எனவும் அவர்கள் பாராட்டினர்.
மேலும் “எங்கள் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் அமைச்சர் கீதா ஜீவன் சட்டமன்ற உறுப்பினராக வர வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்” என பொதுமக்கள் அந்த வீடியோவில் ஆதரவு தெரிவித்து பேசியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி, தூத்துக்குடி மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.