தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் பூவை ஜேம்ஸிடம் கோவில்பட்டி, ஓட்டப்பிடாரம் மற்றும் விளாத்திகுளம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய, நகர மற்றும் மண்டல் நிர்வாகிகள் தங்களது விருப்ப மனுக்களை அளித்தனர்.



அப்போது தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பெருமாள்சாமி மற்றும் தேசிய நெஞ்சங்கள் அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.