தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கொசு தொல்லையால் எங்கள் தூக்கமே போச்சு என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
தூத்துக்குடியில் கடந்த வாரமும், சில தினங்களுக்கு முன்பாகவும் திடீர் என்று கனமழை பெய்தது. இதில் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சில இடங்களில் தண்ணீர் தேங்கியும், சில இடங்களில் தண்ணீர் குறைந்து சாக்கடை நீராக மாறி துர்நாற்றம் வீசுகிறது.
ஒருசில பகுதிகளில் கடந்த ஆண்டு பெய்த மழையால் தேங்கிய நீரை கூட இன்னும் வெளியேற்றப்படமாலும் இருக்கிறது. இதனால் தினங்களுக்கு முன்பு குழந்தை ஒன்று விளையாடி கொண்டு இருக்கும் போது அருகில் தேங்கிய நீரில் எதிர்பாராத விதமாக தவறி விழும் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது.
இதற்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், தேங்கிய நீரை வெளியேற்ற தவறிய நிலத்தின் உரிமையாளர்களையும், அவர்களை கண்டிக்க தவறிய மாநகராட்சி நிர்வாகத்தையும் குறை கூறினார்கள்.
தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகத்தை பொதுமக்கள் குறைகூறி வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் தேங்கிய நீரை அகற்ற தவறியதால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி துர்நாற்றம் வீச தொடங்கி இருக்கிறது. இதனால் கொசு தொல்லையும் அதிக அளவில் இருக்கிறது.
ஏற்கனவே வெயிலின் தாக்கம் வேறு தாங்க முடியாமல் தினமும் தினக்கூலிக்கு வேலை செய்து அயராது உழைத்து இரவில் நிம்மதியாக தூங்க வேண்டும் என்ற கணவோடு வரும் உழைப்பாளர்களுக்கு ஏமாற்றமே இரவு நேரங்களில் கொசு தொல்லை வேறு அதிகமாக இருப்பதால் எங்கள் தூக்கமே போச்சு என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், மாநகராட்சி நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டுவது மட்டுமில்லாமல் வேதனை தெரிவிக்கின்றனர்.
உடனே மாநகராட்சி நிர்வாகம் இந்த கொசு தொல்லையில் பொதுமக்கள் படக்கூடிய வேதனையை கருத்தில் கொண்டு கொசு தொல்லையில் இருந்து விடுபட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி
மாநகராட்சி பகுதிகளில் கொசு தொல்லை தூக்கமே போச்சு - பொதுமக்கள் வேதனை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மாவட்ட நிர்வாகமே..! பள்ளிக்கல்வித்துறையே..!! நடவடிக்கை எடு.! நடவடிக்கை எடு..!!
அடுத்த
இந்த ஆட்சிக்கு இதுவே சாட்சி! செந்தமிழன் சீமான்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026