தூத்துக்குடியில் இன்று (07.05.2025) காலை ஸ்மார்ட் சிட்டி அண்ணா பேருந்து நிலையத்தில் ( பழைய பேருந்து நிலையம்) இருந்து இரண்டு புதிய பேருந்து சேவையை அமைச்சரும், வடக்கு மாவட்ட கழக செயலாளருமான கீதா ஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்த சேகரன், பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், மண்டல தலைவி கலைச்செல்வி, போக்குவரத்து பொது மேலாளர் சரவணன், கோட்ட மேலாளர் ரமேஷ், கிளை மேலாளர் கார்த்திக், மத்திய சங்க பொறுப்பாளர் கருப்பசாமி, தூத்துக்குடி நகர கிளை தொமுச செயலாளர் லிங்குசாமி, தொமுச நிர்வாகிகள் கணேஷ், சரவணப்பெருமாள், ஜீவானந்தம், வீரபொம்முதுரை, உலகநாதன், பழனிக்குமார், மற்றும் கழக செயல்வீரர்கள், தொமுச நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.