ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் மலைப்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 9.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நியாய விலைக் கடையை
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார், சித்தார்த்தன்,
வட்டார வழங்கல் அலுவலர் ஆரோக்கியசாமி, உதவி பொறியாளர் பால நமச்சிவாயம், பணி மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன்,
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சின்ன மாரியப்பன்,
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார்,
ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், இளைஞரணி சூர்யா, கிளை செயலாளர் கணேசன், மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
