தூத்துக்குடியில் மதிமுக தொழிற்சங்கம் சார்பில் மே தினவிழா நடைபெற்றது.
தூத்துக்குடியில் மே தினத்தை முன்னிட்டு மதிமுக தொழிற்சங்கம் சார்பில் அனல்மின் நிலையம் முன்பு கொடியேற்றும் விழா நடந்தது. மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமை வகித்து தொழிற்சங்க கொடியை ஏற்றினார்.
விழாவில் மதிமுக ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் விநாயகம் ரமேஷ், மாவட்ட அவைத் தலைவர் பேச்சிராஜ், மாநகர செயலாளர் முருகபூபதி, தீர்மானக்குழு உறுப்பினர்கள் முத்துசெல்வன், மின்சார பிரிவு மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணன், தெர்மல் கிளை தலைவர் காசிராஜன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் சரவண பெருமாள், மாநில வெளியீட்டு செயலாளர் நக்கீரன் உட்பட தொழிற்சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
