மே 1 உழைப்பாளர் தினமான இன்று இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாண்டியபதி பரதவர் நல சங்கம் சார்பில் பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கம் திறப்பு விழா தூத்துக்குடி தெற்கு பீச் ரோடு சாலை மாதா பேராலயம் அருகில் இன்று (01.05.2025) மாலை தலைமைச் சங்கம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.



பாண்டியபதி தேர்மாறன் நினைவு இடத்தில் மலர் அஞ்சலி செலுத்துதல், பனிமய மாதாவுக்கு மாலை அணிவித்தல், மற்றும் பாண்டியபதி புனரமைக்கட்ட கட்டிடம் திறப்பு ஆர்ச்சிப்பு, மற்றும் குத்துவிளக்கு ஏற்றுதல், நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் தலைமைச் சங்க அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பாண்டியபதி தேர்மாறன், குரூஸ் பர்னாந்து மற்றும் சென்னை சிற்ப்பி சிங்காரவேலர் ஆகியோர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

பாண்டியபதி பரதவர் நல தலைமைச் சங்கத்தை தலைவர் ஆரோக்கியராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பரதவ சமுதாய எழுச்சி பேச்சாளர் காளியம்மாள் சிறப்புரை ஆற்றினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அனைத்து ஊர் பரதவ நல கமிட்டியினர் மற்றும் பாண்டியபதி தேர்மாறன் மீட்பு குழு சிறப்பாக செய்திருந்தனர்.

திறப்பு விழாவில் முன்னாள் பாண்டியபதி பரதவ நல தலைமைச் சங்கத்தின் முன்னாள் தலைவர் பீட்டர், தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல், வழக்கறிஞர் பிரைட்டர், பாண்டியபதி பரதவ நல தலைமைச் சங்கத்தின் பொருளாளர் பெல்லா, பாதர் ஜேசுதாஸ், அமைப்பாளர் அந்தோணி சாமி, பொதுச் செயலாளர் இன்னாசி, கடல்சார் மக்கள் நலச் சங்கம் தலைவர் சின்னதம்பி, மற்றும் ஊர் பரதவ நல கமிட்டியினர் மற்றும் தேர்மாறன் மீட்பு குழு நிர்வாகிகள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் நூல் ஆடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது.