தூத்துக்குடியில் இன்று (01.05.2025) காலை பாளை ரோடு நாயுடு மகாஜன சங்கம் அலுவலகத்தில் திருமண தகவல் மையம் திறப்பு விழா நடைபெற்றது.


திறப்பு விழாவிற்கு நாயுடு மகாஜன சங்கத்தின் செயலாளரும், கவுன்சிலருமான ரெங்கசாமி நாயுடு தலைமை வகித்தார். மேனேஜிங் டிரஸ்டி விவேகானந்தன் நாயுடு, பொருளாளர் ஆதிநாத ஆழ்வார் நாயுடு, துணைச் செயலாளர் சங்கரநாராயணன் நாயுடு, ஆகியோர் முன்னிலையில் டிரஸ்ட் டி தலைவர் ராமசாமி நாயுடு திருமண தகவல் மையத்தை திறந்து வைத்தார்

நம் சமுதாய மக்கள் திருமண பொருத்தமான மணமகன், மணமகள் ஜாதகம் பெற்று பயன்பெற வேண்டுமென நாயுடு மகாசபை சங்கம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் டிரஸ்ட் உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன் நாயுடு, செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன் நாயுடு, அழகர்சாமி நாயுடு, சங்கரநாராயணன் நாயுடு, முனியசாமி நாயுடு, முருகன் நாயுடு, அங்குசாமி நாயுடு, எல்.ஆர். மந்திர மூர்த்தி நாயுடு, வரதராஜன் நாயுடு, எஸ். சங்கரநாராயணன் நாயுடு, மற்றும் கிருஷ்ணவேணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.