அருள்மிகு ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை, ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் சித்திரை பெருந்திருவிழா, தேரோட்ட பவனி விழாவானது இன்று (01.05.2025) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.



அன்று (10.05.2025) சனிக்கிழமை காலை 10.45 மணியளவில் சித்திரை மாத தேரோட்ட பவனி தொடக்கம் நடைபெறுகிறது. (01.05.2025) வியாழக்கிழமை முதல் (10.05.2025) சனிக்கிழமை வரை தினமும் மாலை 6 மணிமுதல் 7 மணிவரை மற்றும் இரவு 7 மணிமுதல் 9 மணிவரை திருக்கோயில் கலை அரங்கத்தில் வைத்து கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று (10.05.2025) சனிக்கிழமை நடைபெற இருக்கும் தேரோட்ட பவனி விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பிக்குமாறு சிவன் கோவில் அறங்காவலர் குழு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.



நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி சிவன் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர் குழு அதிகாரிகள், நிர்வாகிகள் மற்றும் சிவன் பக்தர்கள் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் சிவன் கோவில் செல்லம் பட்டர் சொற்பொழிவு ஆற்றினார்.