சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் இடையே சிறப்பு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.


இந்த விளையாட்டு போட்டிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார். பின்னர் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மேயர் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.


இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த விளையாட்டு போட்டி மாநகராட்சி ஊழியர்களிடையே உற்சாகத்தையும் ஒற்றுமையையும் அதிகரித்தது.