சென்னையில் தமிழர் ஆட்சிக் கழகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் எஸ்.ஆர். பாண்டியன், நேற்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்காக தமிழர் ஆட்சிக் கழகத்தினர் முழுமையாக பணியாற்றியதை நினைவுகூர்ந்த அவர், அதேபோல் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுகவின் வெற்றிக்காக தங்கள் கழகம் முழு ஆதரவுடன் செயல்படும் என உறுதியளித்தார்.
தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் மக்கள் நலத்திற்காக திமுக அரசு மேற்கொண்டு வரும் திட்டங்கள் பாராட்டத்தக்கவை என்றும், அந்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டுமெனும் நோக்கில் தங்கள் கட்சி திமுகவுடன் இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளதாக எஸ்.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
இந்த சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், தமிழர் ஆட்சிக் கழகத்தின் ஆதரவு திமுகவிற்கு கூடுதல் வலுவாக அமையும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.