தூத்துக்குடி ஹவுசிங் போர்டு பகுதி 15 வது வார்டு, 16 வது வார்டு தமிழக வெற்றிக் கழகம், மற்றும் ஜெ.ஜெ. பன்நோக்கு பல் மருத்துவமனையினை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று காலை நடைபெற்றது.



முகாமினை 15 வது வார்டு செயலாளர் உயிர் மெய் அறக்கட்டளை நிறுவனர் வசந்த், 16 வது வார்டு செயலாளர் சீமான் ஆகியோர் முன்னிலையில் தவெக மத்திய மாவட்ட செயலாளர் எஸ்.டி.ஆர். சாமுவேல் ராஜ் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.



நிகழ்ச்சியில் சதீஷ் குமார், மகேஷ், விஜய் சுபாகர், பாபு, கருப்பசாமி, மரியா, ஜீடி, திலகவதி, எம்.கே. பாலா, சுந்தர், மணிகண்டன், மயில்,  ராஜேஷ், மகாராஜா, செல்லப்பா, ரமேஷ் பாண்டி, மற்றும் தவெக நிர்வாகிகள், பலர் கலந்து கொண்டனர்.

திரளான பொதுமக்கள் இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.