தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் 36 வது வார்டு வட்ட செயலாளர் பொறுப்புக்கு விண்ணப்பித்த தேவநேசம் என்பவரை தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் மக்கள் போராளி கணேசன் பரிந்துரையின் பேரில், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவரும், எம்.பி. யுமான எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் ஆனைக்கிணங்க வட்டச் செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டு இன்று முதல் நியமனம் செய்யப்படுகின்றார்.



வட்ட செயலாளராக பொறுப் பேற்றிருக்கும் தேவநேசம் என்பவருக்கு தூத்துக்குடி மத்திய மாவட்ட செயலாளர் மக்கள் போராளி கணேசன் தலைமையில், விசிக நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் திருமாஜி நகர் மா. மாரிமுத்து, மாவட்ட செய்தி தொடர்பாளர் ரா. செல்வக்குமார், மாவட்ட தொண்டரணி லெ. முருகன், மாவட்ட ஊடகம் மையம் ப. முத்துக்குமார், 49 வது வார்டு பொறுப்பாளர் ஆ. ஆறுமுகம், உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.