தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் போராட்டம் எதிரொலியாக தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடியில் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடுவதாகக் கூறி டவுன் ஏஎஸ்பி மதனை கண்டித்தும், தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்தமிழ் அரசன் பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் இன்று 3வது நாளாக நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதில் 272 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 782 வழக்கறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், வழக்கறிஞர் சங்க தலைவர் தனசேகர் டேவிட், செயலாளர் செல்வின் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், தென்பாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் முத்தமிழ் அரசன் ஆயுதப்படைக்கு உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டார். ஏ.எஸ்.பி. மதன் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும் என்று எஸ்பி உறுதிமொழி அளித்தார்.
இதைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். மேலும் நாளை 5ம் தேதி முதல் வழக்கம் போல் நீதிமன்ற பணிக்கு வழக்கறிஞர்கள் செல்வார்கள் என்று வழக்கறிஞர் சங்கத் தலைவர் தனசேகர் டேவிட் தெரிவித்தார்.
தூத்துக்குடி
சப்இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம் - வழக்கறிஞர்கள் போராட்டம் வாபஸ்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கல்லூரி பேராசிரியர் மாணவிகள் மீது பாலியல் தொல்லை - இந்திய மாணவர் சங்கம் சார்பில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம்!!
அடுத்த
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் : காங்கிரஸ் அறிவிப்பு!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026