தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகா வள்ளிநாயகபுரத்தை சார்ந்த பன்னீர் மகன் முகிலேஷ் என்ற குழந்தை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முகிலேஷ் என்ற குழந்தைக்கு ஓ பாசிடிவ் இரத்தம் ஆறு யூனிட் தேவைப்படுவதாக புதுக்கோட்டை மரம் வரம் நிர்வாக இயக்குநர் இராம்க்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
மரம் வரம் என்ற அறக்கட்டளை மூலம் பல்வேறு விதமான சமூக பணி, மற்றும் தொண்டுகள் செய்து கொண்டு இருக்கும் நிர்வாக இயக்குநர் இராம் உடனடியாக 5 குருதி கொடையாளர்களை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு நேரில் அழைத்து சென்று அவர்களோடு மரம் வரம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் இராமும் தங்களது குருதிகளை தானமாக வழங்கி குழந்தையின் மேல் சிகிச்சைக்கு பெரிதும் உதவினார்கள்.
குருதிகளை கொடையாக வழங்கிய விளாத்திகுளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவியின் கணவர் செந்தில்குமார், தூத்துக்குடி ஸ்பிக் நகர் பகுதி சார்ந்த செந்தில்குமார், புதுக்கோட்டை தங்கதுரை, வாசன் ஐ கேர் பவுண்டேஷன் நாராயணன், ஆகியோரின் செயலை பாராட்டி தூத்துக்குடி அரசு மருத்துவமனை இரத்த வங்கி மேலாளர் சாந்தி, முன்னாள் சுகாதார ஆய்வாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் குருதி கொடையாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் நினைவு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து இதுபோன்ற பல நல்ல செயல்களை மரம் வரம் அறக்கட்டளை செய்ய வேண்டும் என்று வாழ்த்தினார்கள். உடன் மரம் வரம் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் இராம் உடன் இருந்தார்.
தூத்துக்குடி
குருதிகளை தானமாக வழங்கிய கொடையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவுபரிசு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பள்ளி மாணவனை நேரில் சந்தித்து எம்.எல்.ஏ., ஜெகன் மூர்த்தியார் ஆறுதல்!!
அடுத்த
விசாரணையில் திருப்தி இல்லையா, நாளை புதன்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க!!
இதையும் படிக்கலாம்
ஆடி வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு மஹா யாகம்: பக்தர்கள் திரளாக பங்கேற்று தரிசனம்!!
18 Jul 2026
இந்தியாவின் முதல் உள்நாட்டு ஹைட்ரஜன் ரயில் – பசுமை வளர்ச்சியில் புதிய மைல்கல்: அன்னபூர்ணா பிள்ளை!!
18 Jul 2026
தூத்துக்குடி பிரதான சாலைகளில் புதிய டாஸ்மாக் கடைகள்: உடனே மூடாவிட்டால் பாஜக மாபெரும் போராட்டம் – தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரிக்கை!!
17 Jul 2026
உலக மக்கள் தொகை தினம்: தூத்துக்குடியில் மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்!!
17 Jul 2026