ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் முறம்பன் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன், அருள்மிகு ஶ்ரீ காளியம்மன், ஶ்ரீ கெங்கா ஈஸ்வரி திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நடத்திய மாபெரும் இரண்டாம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயமான பூஞ்சிட்டு மற்றும் தேன்சிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயத்தை அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேசபாண்டியன், ஓட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.




பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயத்தில் முதலிடம் பிடித்த ஹோட்டல் கயத்தார் மாட்டுவண்டிக்கு பரிசுத் தொகை 23001 ரூபாயினை அயிரவன்பட்டி தொழிலதிபர் முருகேசபாண்டியன் வழங்கினார். தேன்சிட்டு மாட்டுவண்டி பந்தயத்தில் முதலிடம் பிடித்த முறம்பன் தேன்மொழி சுடலைமணி எஸ்.டி.கே. மெடிக்கல் மாட்டு வண்டிக்கு பரிசுத்தொகை 13001 ரூபாயினை ஒட்டப்பிடாரம் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் வவழங்கினார்.



இந்நிகழ்ச்சியில் தொழிலதிபர் பொன்முருகன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அருண்குமார், ஒன்றிய பொறியாளர் அணி மணிகண்டன், சங்கம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், பாஞ்சாலங்குறிச்சி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் லதா கருணாநிதி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அரிச்சந்திரன், மற்றும் பொதுமக்கள் திரளாக உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.