தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கான “மாபெரும் பூத் கமிட்டி மாநாடு” வருகிற நவம்பர் 2ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணிக்கு ஸ்ரீவைகுண்டம் வ.உ.சி திடலில் (ஸ்டேட் பேங்க் அருகில்) பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இம்மாநாடு, பாஜக அமைப்பின் அடித்தளம் எனக் கொள்ளப்படும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல், வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை முன்னெச்சரிக்கையுடன் தயார்படுத்துதல், மேலும் வெற்றிக்கான வியூகங்களை வகுத்தல் ஆகிய நோக்கங்களுடன் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான திரு. பொன். ராதாகிருஷ்ணன் அவர்கள், மற்றும் பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளருமான திரு. கேசவவிநாயகம் ஜி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
மாநில அமைப்பு பொதுச்செயலாளர் திரு. கேசவவிநாயகம் ஜி அவர்கள், “வரவிருக்கும் தேர்தல்களில் ஒவ்வொரு கிளைகளையும் (பூத்துகளை) வெற்றி பெற வைக்க வேண்டும்” என்ற இலக்கை வலியுறுத்தி, அதனை அடைவதற்கான விரிவான செயல்திட்டங்களையும் வழிகாட்டுதல்களையும் வழங்க உள்ளார்.
இம்மாநாட்டில் மாநில, மாவட்ட, மண்டல, கிளை நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பெருந்திரளாகக் கலந்து கொள்ளுமாறு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் திரு. சித்ராங்கதன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டத்தில் நவம்பர் 2ம் தேதி பாஜக மாபெரும் பூத் கமிட்டி மாநாடு!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டுமனை — கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன் முயற்சியில் விரைவில் வழங்கப்படும் : மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
அடுத்த
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி – 103 ஆண்டுகளின் இலாபப் பயணத்தில் புதிய மைல்கல்: இரண்டாம் காலாண்டில் சாதனை நிகர லாபம்!!
இதையும் படிக்கலாம்
சுதந்திர போராட்ட வீரர் புலித்தேவன் 311வது பிறந்தநாள்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை!!
01 Sep 2026
தூத்துக்குடி 3வது வார்டில் புதிய ரேஷன் கடை திறப்பு: கவுன்சிலர் ஆர். ரெங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்!!
01 Sep 2026
39 ஆண்டுகளாக தீராத தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கை! “எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும்” என்ற முதல்வர் விஜய் வாக்குறுதி நிறைவேறுமா?
29 Aug 2026
சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை 2 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தும் வகையில் காலவரம்பை மாற்ற வேண்டும்!மாநகராட்சி நிர்வாகத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!!
29 Aug 2026