தூத்துக்குடி வளா்ந்து வளரும் தொழில் நகரங்களில் ஒன்று, அதற்கேற்றாற்போல் தமிழக அரசும் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி பொதுமக்கள் நலன் காத்து வருகின்றது.



சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டம் ஓழுங்கை பாதுகாக்கும் வகையில் ஒரு சில இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அஅமைக்கப்பட்டிருந்தன. அந்த கேமராக்கள் பராமரிப்பின்றி சேதமடைந்தன.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவிற்கிணங்க, டவுன் ஏ.எஸ்.பி. மதன் வழிகாட்டுதலின்படி எப்.சி.ஐ குடோன் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் துவக்கி வைத்தாா்.

அப்போது அவர் தெரிவித்ததாவது தூத்துக்குடி மாநகாில் முக்கியமான அனைத்து பிரதான சாலை பகுதிகளில் 650 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்கள் வேறு எந்த தொடா்பிலும் இல்லாமல் தனி வழித்தடம் மூலம் 4 மாத காலத்திற்குள் முழுமையாக
நிறைவு பெறும் இதற்கென்று தனி கன்டேரால் ரூம் அமைக்கப்பட்டு முழுமையாக கண்காணிக்கப்பட இருக்கிறது.



இதன்மூலம் போக்குவரத்து நெருக்கடி மற்றும் இலகு ரக, கனரக வாகனங்கள், எவ்வளவு வந்து செல்கிறது என்பதையும் கணக்கிடப்பட இருக்கிறது.

அதே போல் 3ம் மைல் தேசிய நெடுஞ்சாலை பாலம், முத்தையாபுரம் ரவுண்டானா, மாப்பிள்ளையூரணி விலக்கு, புதூர் பாண்டியாபுரம், உள்ளிட்ட 8 இடங்களில் தற்போது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு தொடர்ந்து எல்லா பகுதிகளுக்கும் விாிவுப்படுத்தப்பட்டு குற்றச்செயல்கள் நடக்காத வகையில் மக்கள் பாதுகாப்பு நலன் கருதி, செயல்படுத்தப்படும்.

6 மாதங்களில் இதன்மூலம் நல்ல மாற்றங்கள் தொியவரும் என்று கூறினாா். நிகழ்ச்சியில் உதவி போக்குவரத்து காவல் ஆய்வாளர் சண்முகபாலன், உள்ளிட்ட போக்குவரத்து தலைமை காவலா்கள் பலர் உடன் இருந்தனர்.