தூத்துக்குடியில் போப் பிரான்சிஸ் உருவ படத்திற்கு ஆயர் ஸ்டீபன் ஆந்தோணி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ் மறைந்தார். அவருக்கு வயது 88. போப் பிரான்சிஸின் மறைவு உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் தூத்துக்குடி ஆயர் இல்லத்தில் போப் பிரான்சிஸ் உருவ படத்திற்கு  மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆந்தோணி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில்  பங்கு தந்தையர்கள் ஆயர் இல்ல வளாக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.