தூத்துக்குடி மாநகராட்சி 3 வது வார்டு கவுன்சிலர் ரெங்கசாமி இல்ல பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி ஏ.வி.எம். கமலவேல் மஹாலில் வைத்து இன்று காலை நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா எம்.எல்.ஏ. பூப்புனித நீராட்டு விழாவிற்கு நேரில் வந்து செல்வி சாய் வர்ஷிதா வை வாழ்த்திவிட்டு சென்றார். சண்முகையா எம்.எல்.ஏ. விற்கு கவுன்சிலர் ரெங்கசாமி தலைமையில் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் முன்னாள் யூனியன் சேர்மன் ரமேஷ் உட்பட ஒட்டப்பிடாரம் தொகுதி நிர்வாகிகள், மற்றும் தொமுச நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.