தூத்துக்குடியில் (03.04.2025) அன்று காலை அத்திமரப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜோதிமணி கதை வசனத்தில், பிராட்வே சுந்தரின் திரைக்கதை, இயக்கம், இசையில், மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி தயாரிப்பில் உயிர்மூச்சு திரைப்படம் தூத்துக்குடி கிளியோபாட்ரா திரையரங்கில் விவசாயி ஜோதிமணி, மெர்சி ரோஸ்லின் ஜோதிமணி மற்றும் பிராட்வே சுந்தர் திருக்கரங்களால் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் தீபா சங்கர், விஷ்ணு, ராஜ்கபூர், ஸ்டண்ட் மதுர, சிவசு, ராஜேந்திர பூபதி, தாமரை செல்வன், வக்கீல் செங்குட்டுவன், ராஜ் மாசாணம், சீலன்ஸ்ருதி, ஐ. செல்வக்குமார், ஜெரோம், காமெடி வேடத்தில் சுமங்கலி சதீஷ், சேலம் சரண், வருண், உட்பட பலர் நடித்துள்ளனர்.
உயிர் மூச்சு திரைப்படம் இன்றுடன் 30 நாட்களை கடந்து வெற்றி நடை போட்டு கொண்டு இருக்கிறது. குடிப்பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து இயக்கிய படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இந்த படம் முழுக்க முழுக்க தூத்துக்குடியை மையமாக கொண்டு இயக்கியதால் நம் மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்கம் வந்து ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
உயிர் மூச்சு திரைபடத்தை பார்த்து அதில் வரும் காட்சிகளில் பிரம்மித்து இதுபோன்று பல நல்ல கதைகளை இயக்கிய திரைபட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு மட்டுமல்லாது, ஸ்ரீ செல்லம் சுடிதார் ரெடிமேட் உரிமையாளர் உயிர் மூச்சு திரைபடத்தை திரையரங்கில் பார்த்து விட்டு பின்னர் என் கடைக்கு நேரடியாக வந்து உயிர்மூச்சு திரைபடத்தின் 6 டிக்கெட்டை கொடுப்பவர்களுக்கு 1 சுடிதார் இலவசம் என்று சலுகையை அறிவித்து இருக்கிறார்.
உயிர் மூச்சு திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் தீபா சங்கர், மற்றும் காமெடி நடிகனாக சுமங்கலி சதீஷ், சேலம் சரண், வருண், ஆகியோர் நடிப்பு காண்போரை பிரம்மிப்பூட்டும் அளவிற்கு உள்ளது.
மொத்தத்தில் உயிர் மூச்சு திரைப்படம் வெற்றி படங்களில் தங்களுக்கான ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டது என்றே கூறலாம்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உயிர்மூச்சு திரைப்படம் தொடர்ந்து 30 வது நாளை கடந்து வெற்றி நடை போடுகிறது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஞ்சாலங்குறிச்சி ஸ்ரீ வீரசக்க தேவி 69 வது ஆண்டு ஆலய விழா - எம்.எல்.ஏ. சண்முகையாவிற்கு அழைப்பு!!
அடுத்த
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 கோடியே 46 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் - பொதுமக்கள் பயன்பாட்டிற்கு எம்.எல்.ஏ. சண்முகையா திறந்து வைத்தார்!!
இதையும் படிக்கலாம்
"நீட் தேர்வை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்க்கும்; தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை உருவாக்குவோம்" – தூத்துக்குடியில் அகில இந்திய செயலாளர் டாக்டர் செல்லக்குமார் பேட்டி!!
20 Jul 2026
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் மாபெரும் மினி மாரத்தான்: 1,887 பேர் உற்சாக பங்கேற்பு; 124 பேருக்கு பரிசுகள் வழங்கல்!!
20 Jul 2026
"ராஜினாமா செய்து தவெகவில் சேரச் சொன்னார்கள்" – ரூரல் டிஎஸ்பி மீது அனிதா ராதாகிருஷ்ணன் பரபரப்பு குற்றச்சாட்டு!!
20 Jul 2026
“ஒடுக்க ஒடுக்க நீர்க்குமிழி போல மேலே வருவோம்” – மார்க்கண்டேயன் எம்எல்ஏ கைது விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் கீதாஜீவன் கடும் கண்டனம்!!
20 Jul 2026