தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி பாஞ்சாலங்குறிச்சி அருள்மிகு ஸ்ரீ வீரசக்க தேவி 69 ஆம் ஆண்டு விழாவும், இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு விழா (09.05.2025) வெள்ளிக்கிழமை முதல் (11.05.2025) ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் விழா நடைபெற உள்ளது.

மேற்படி விழாவில் கலந்து கொள்ள ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையாவை நேரில் சந்தித்து வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் MJF முருக பூபதி தலைமையில் பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

முருகபூபதி, மொட்டையசாமி, வெயில் ராஜ், முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.