தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியம் மணப்பாடு ஊராட்சியில் திமுக மற்றும் அதிமுகவை சார்ந்த 500 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் கூண்டோடு அக்கட்டுரையில் இருந்து வெளியேறி தெற்கு மாவட்ட செயலாளரும், வழக்கறிஞருமான பிரைட்டர் தலைமையில் தவெக தங்களை இணைத்துக் கொண்டனர்.




மணவை ரூஸ்வெல்ட் தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டருக்கு ஆள் உயர ரோஸ் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

தவெக வில் இணைந்த மாற்று கட்சியை சார்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் தவெக கட்சி துண்டை அணிவித்து தெற்கு மாவட்ட செயலாளர் பிரைட்டர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். நிகழ்ச்சியில் திரளான தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.