பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், 498 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில்  இரண்டாம் இடம் பெற்ற,  புதியம்புத்தூரை சேர்ந்த மாணவி M.ரேஷ்மா, 497 மதிப்பெண்கள் பெற்று, மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற, தூத்துக்குடியை சேர்ந்த மாணவி P. ஜெர்லின் ரக்ஷனா, மற்றும் பெற்றோர்களை இழந்தாலும் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்ற தூத்துக்குடி KVK நகரை சேர்ந்த மாணவி V.ஹர்ஷினி, ஆகிய வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மாணவிகளுக்கு,


தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வெற்றி பெற்ற மாணவிகளை தன்னுடைய இல்லத்திற்கு நேரில் அழைத்து, கேக் வெட்டி, சால்வை அணிவித்து, மேற்படிப்பு கல்விக் கட்டணத்திற்கானத் தொகையை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட தவெக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.