தூத்துக்குடி கட்டபொம்மன் நகர் கருணாகரன், காளீஸ்வரி தம்பதியின் இளைய மகன் பொன் பாலமுருகன் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய வந்த நிலையில் நேற்றைய தினம் பத்தாம் வகுப்பிற்கான தேர்வு முடிவு வெளியானது.
இதில் பொன் பாலமுருகன் 500 மதிப்பெண்ணுக்கு 493 மதிப்பெண் எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்து பள்ளிக்கும் தூத்துக்குடி கட்டபொம்மன் நகருக்கு பெருமை சேர்த்துள்ளார்.
பள்ளியில் முதலிடம் பிடித்த பொன் பாலமுருகனை வீரசக்க தேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி பாஞ்சாலங்குறிச்சிக்கு நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி மரியாதை செய்து வீரசக்க தேவி ஆலய குழு சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் முழுவுருவ சிலையை பரிசாக வழங்கினார்.
இதோடு நில்லாமல் தொடர்ந்து பல சாதனைகளை புரிய வேண்டும். நம் சமுதாயத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மொட்டையசாமி (மேஸ்திரி) முத்தையாபுரம் கண்ணன், வீரசக்க தேவி ஆலய குழு செயலாளர் செந்தில்குமார், பாஞ்சாலங்குறிச்சி செண்பகராஜ், முத்துக்குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.
தூத்துக்குடி
பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதலிடம் - வீரசக்க தேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி சால்வை அணிவித்து வாழ்த்து!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்எல்ஏ சண்முகையா குறித்து அவதூறு பரப்பிய முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்டோர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு!!
அடுத்த
தூத்துக்குடியில் தவெக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மாநிலத்தில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளின் மேற்படிப்புக்கு உதவி!!
இதையும் படிக்கலாம்
ஏடிஎஸ்பி திபு மீது தூத்துக்குடி பத்திரிகையாளர்கள் எஸ்.பி. அபிஷேக் குப்தாவிடம் புகார் – 'இனி இதுபோல் நடக்காது' என உறுதி!!
21 Jul 2026
10 வயது சிறுமிக்கு நவீன லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை வெற்றி: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சாதனை!!
21 Jul 2026
39 ஆண்டுகளாக காத்திருக்கும் கனவு... தூத்துக்குடி பத்திரிகையாளர்களின் வீட்டுமனை கோரிக்கையை முதல்வர் விஜய் நிறைவேற்றுவாரா?
21 Jul 2026
தூத்துக்குடி இ.எஸ்.ஐ பயனாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: வாஸன் கண் மருத்துவமனையில் இனி இலவச கண் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை வசதி!!
21 Jul 2026