தூத்துக்குடியில் மே 5ம் தேதியான இன்று 42 வது வணிகர் தினத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கம் 2 வது மாநில மாநாடு மற்றும் வணிகர் நல பாதுகாப்பு மாநாடு, பாளையங்கோட்டை ரோடு, நீதிமன்ற எதிர்ப்புறம் மணி நகர் 3வது தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து இன்று காலை தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் காமராசு நாடார் தலைமையில் தமிழ்நாடு வணிகர் சங்கம் மாநாடு நடைபெற்றது.



தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் சங்க கொடியினை மாநில தலைவர் காமராசர் நாடார் கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைத்தார். மாநாடானது தமிழ் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கியது. தமிழ்நாடு வணிகர் சங்க மாநில செயலாளர் நாகராஜன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மாநில கூடுதல் செயலாளர் யாபேஷ், மாநில துணை தலைவர் சுகுமார், மாநில துணை தலைவர் மாயன் ரமேஷ், மாநில செய்தி தொடர்பாளர் செல்வின், மாநில இணை செயலாளர் குருசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


பழனி நகர வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நகர கௌரவ தலைவர் கந்தவிலாஸ் செல்வகுமார், திருவாரூர் வர்த்தகர்கள் பாதுகாப்பு சங்கம் மாவட்ட தலைவர் பாலாஜி, முஸ்லிம் ஐக்கிய பேரவை காயல்பட்டினம் செயலாளர் நவாஸ் அகமது, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கீதா இமானுவேல், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேருரை நிகழ்த்தினார். மேயருக்கு தமிழ்நாடு வணிகர் சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.



நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில, மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். தமிழ்நாடு வணிக சங்கத்தின் மாநில பொருளாளர் ராஜா. ராமச்சந்திரன் நன்றி உரை நிகழ்த்தினார்.